Home Current Affairs 02.03.2019 Tamil Current Affairs

02.03.2019 Tamil Current Affairs

0

தமிழக நிகழ்வுகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்மேற்கொள்ளப்பட்டது.

இதில் கலந்து கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு, அரசு சார்பில் வழிகாட்டுதல் கூட்டம் சென்னை கிண்டியில் நடந்தது.

ஒப்பந்தம் மேற்கொண்டவர்களில் 366 தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கி உள்ளன.

இந்திய நிகழ்வுகள்

வெயிலில் பணிபுரியும் கட்டிட தொழிலாளர்கள், உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வெயிலினால் ஏற்படும் மயக்கம் மற்றும் தொல்லைகளில் இருந்து தப்பிக்க மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கட்டாய இடைவேளை அளிக்க கேரள அரசின் மாநில தொழிலாளர் துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உலக நிகழ்வுகள்

பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

விளையாட்டு நிகழ்வுகள்

சாபஹாரில் (ஈரான்) நடைபெற்ற மக்ரான் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் சிங் தங்கப் பதக்கம்வென்றுள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான 47வது தேசிய சீனியர் ஆண்கள் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா-வின் பயிற்சியாளராக ஜெர்மைன் ஜென்கின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நவோமி ஒசாகா கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் மற்றும் இந்தாண்டு ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் ஆகியவற்றை கைப்பற்றி முதன் முறையாக டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

பொருளாதார நிகழ்வுகள்

2019 மற்றும் 2020ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீத அளவுக்கு இருக்கும் என தரச்சான்று நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.

2019ம் ஆண்டு, பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் 97 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகியிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டில் சீர்திருத்த நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி முதலிடத்தில் உள்ளது.

இதற்காக, அந்த வங்கி 100 மதிப்பெண்களில் 78.4 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பேங்க் ஆஃப் பரோடா (77.8), எஸ்பிஐ (74.6), ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (69), கனரா வங்கி (67.5), சிண்டிகேட் வங்கி (67.1) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here