Home Current Affairs 13.03.2019 Tamil Current Affairs

13.03.2019 Tamil Current Affairs

0

தமிழக நிகழ்வுகள்

இந்தியாவின் பெண்களுக்கான அதிகபட்ச குடிமையியல் விருதான “நாரிசக்தி விருதுகள், 2018ல் 44 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

பேடி பச்சாவோ பேடி பதாவோ திட்டத்தின் கீழ் குழந்தை பிறப்பு சமயத்தில் குழந்தை பாலின விகிதத்தை அதிகரிப்பதில் மேன்மையான வளர்ச்சி அடைந்ததற்காக தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவுத் துறையானது நாரி சக்தி விருது பெற்றுள்ளது.

இந்திய நிகழ்வுகள்

ஹச்.ஐ.வி (HIV)-ஆல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச ஆலோசனை மற்றும் ART – Therapy (Anti – Retroviral Therapy) முறையில் சிகிச்சை வழங்குவதற்காக, இந்தியாவில் HIV சிகிச்சை மையமானது மும்பையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை (Humsagar Trust) ஹம்சகர் அறக்கட்டளை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேச மாநில அரசானது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 14%-லிருந்து 27 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான அரசியலமைப்பு ஷரத்து – 338B

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நல ஆணையத்திற்கு – அரசியலமைப்பு அந்தஸ்து 102வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

உலக நிகழ்வுகள்

ஸ்டாக்லோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI – Stockholm International Peace Research Institute) சமீபத்தில் வெளியிட்டுள்ள, 2018ம் ஆண்டில் உலகில் ஆயூத இறக்குமதி நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடம் பிடித்துள்ளது.

முதலிடத்தில் சவுதி அரேபியா உள்ளது.

பாலஸ்தீன நாட்டின் புதிய பிரதமராக முகமது சட்யா (Mohammad Shtayyeh) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலஸ்தீன நாட்டின் குடியரசுத் தலைவர் மஹமூத் அப்பாஸ் ஆவார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

உயர்தர வானொலி மற்றும் தொலைக்காட்சி பரப்புகை சேவைகளைஅளிப்பதற்காக, சீனாவானது “சீனாசாட் 6C” என்ற செயற்கைகோளை “லாங் மார்ச் – 3B” என்ற ஏவு வாகனத்தின் மூலம் புவி சுற்றுவட்டப் பாதைக்கு செலுத்தியுள்ளது.

இதன் சேவையை சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்பசிபிக் தீவுகளை சேர்ந்த நாடுகள் பயன்படுத்த முடியும்.

மார்ச் 29 அன்று பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் முதலாவது விண்வெளி நடைபயணத்தை நாசா – வானது நடத்தவுள்ளது.

இந்த விண்வெளி நடைபயணமானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த “அனி மெக்லைன் மற்றும் கிறிஸ்டினா கோச் ஆகியோரால் மேற்கொள்ளப்படவுள்ளது.

விண்வெளியில் நடை பயணம் மேற்கொண்ட முதல் பெண்மணி சோவியத்தைச் சேர்ந்த “ஸ்வெட்லானா சாவிட்ஸ்கயா” ஆவர்.

1984 ஜூலை 25ல் இவர் நடைபயணம் மேற்கொண்டார்.

நியமனங்கள்

சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் உள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் – மத்திய வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR – CECRI/Central Electro Chemical Research Institute) முதலாவது பெண் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் என். கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்தகங்கள்

பிரதமரின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளை உள்ளடக்கிய “சப்கா சாத் சப்கா விகாஸ்” என்ற புத்தகம் நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here