Home News Sabarimala Online Ticket Booking, E-Pass, Steps to book Sabarimala Darshan Ticket Online in Tamil

Sabarimala Online Ticket Booking, E-Pass, Steps to book Sabarimala Darshan Ticket Online in Tamil

0

Sabarimala Online Ticket Booking, E-Pass, Steps to book Sabarimala Darshan Ticket Online: பக்தர்கள் இணையவெளியில் டிக்கெட் முன் பதிவு செய்த பின்னரே சபரிமலை ஐயப்பன் தரிசனம் செய்ய முடியும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே நம் அனைவருக்கும் நியாபகம் வருவது சபரிமலை ஐயப்பன் தான். இக்கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய வருவார்கள்.

ஆனால் சென்ற ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த ஆண்டு கோவில் நிர்வாகம் நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்களை மட்டும் அனுமதிப்பதாக முடிவெடுத்துள்ளது. ஏன் என்றால் இந்த ஆண்டு covid- 19 தாக்கம் அதிகமாக உள்ளதால் இச்செயல்பாட்டை கோவில் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. கடந்த 14 நவம்பர் 2020 அன்று தொடங்க பட்ட ஆன்லைன் புக்கிங்ல் அனைத்து டிக்கெட்டுகளும் சிறிது நேரத்திற்குள்ளாகவே தீர்ந்து போய்விட்டது.

எனவே பக்தர்களின் நலனுக்காக கோவில் நிர்வாகம் மறுபடியும் ஆன்லைன் கவுண்டரை திறக்க உள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு 2000 முதல் 5000 பக்தர்களை அனுமதிப்பதாக செய்திகள் வந்த வண்ணமாக உள்ளது. ஆனால் அதிகார பூர்வமான செய்தி இன்னும் வரவில்லை. ஆகவே தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முன் கூட்டியே இணையவெளியில் டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ளவும்.

Sabarimala Online Ticket Booking
Sabarimala Online Ticket Booking

Steps to book Sabarimala Darshan Ticket Online

  • சபரிமலை தரிசனம் செய்ய முதலில் https://sabarimalaonline.org/#/login என்ற இணையதளத்தில் Register என்பதை கிளிக் செய்து தேவையான தகவல்களை உள்ளிடவும்.
  • இதில் பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, புகைப்படத்துடன் கூட அடையாள அட்டை, முகவரி, மாநிலம், மாவட்டம், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும்.
  • தகவல்களை சமர்ப்பித்ததும் அதில் குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு ‘OTP’ அனுப்பப்படும்.
  • மீண்டும் இ-மெயில், பாஸ்வேர்ட் உள்ளிட்டு உள்நுழைந்து தரிசனம் செய்வதற்கான தேதி தேர்வு செய்து கொள்ளவும் மேலும் பிரசாதத்தில் அரவன, அப்பம், அபிஷேக நெய், விபூதி, மஞ்சள் மற்றும் குங்குமம் எத்தனை தேவை போன்ற விபரங்களை உள்ளிட்டு ஆன்லைன் டிக்கெட் புக் செய்துகொள்ளலாம்.

சபரிமலை ஐயப்பன் தரிசனம் டிக்கெட் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here